2013-06-04 17:01:03

பிரிட்டன்: வீணாக்கப்படும் உணவின் அளவைக் குறைக்க வேண்டும்


ஜூன்,04,2013. பிரிட்டனில் வீடுகளிலும் கடைகளிலும் சேதமாகும் உணவுப் பொருட்களின் அளவைக் குறைக்க அரசு மிகுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டனில் மக்கள் வாங்குகின்ற உணவில் 20 விழுக்காடு பயன்படாமலேயே குப்பைக்குப் போகிறது. உலகின் மதிப்புமிக்க வளங்களைப் பயன்படுத்தி இந்த உணவுப் பொருட்களைத் தயாரித்துவிட்டு, பின்னர் அவற்றை எவருமே பயன்படுத்தவில்லை என்பது வளங்களை வீணாக்குவதற்குச் சமமானது. எனவே உணவு விரயமாவதைத் தடுக்க வேண்டும் என அனைத்துலக முன்னேற்றக் குழுவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.
பிரிட்டனில் மக்கள் வாங்குகின்ற உணவில் மற்றும் பானங்களில் இருபது விழுக்காட்டை அவர்கள் பயன்படுத்தாமலேயே குப்பையில் வீசுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : பிபிசி








All the contents on this site are copyrighted ©.