2013-06-04 16:57:32

உலக அளவில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் ஏற்படும் சமூக மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை


ஜூன்,04,2013. ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் உலகிலுள்ள 5 வயதுக்குட்பட்ட சிறாரில் 26 விழுக்காட்டினரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக உணவு மற்றும் வேளாண்மையின் நிலை என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இந்த ஐ.நா. நிறுவனம், 2010க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய 87 கோடிப் பேர் பசியால் வாடியிருந்தாலும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் கோடிக்கணக்கான மக்களின் நலவாழ்வும், நல்வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியது.
உலகில் 200 கோடிப் பேர் ஏதாவது ஒரு வகையில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை சம்பந்தப்பட்ட நோயினால் தாக்கப்பட்டுள்ளனர் எனவும், 140 கோடிப் பேர் பருமனாக இருப்பதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
5 வயதுக்குட்பட்ட 31 விழுக்காட்டுச் சிறார் வைட்டமின் A பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.