2013-06-04 16:54:10

90க்கும் மேற்பட்ட இஸ்பானிய மறைசாட்சிகள் குறித்த விபரங்களைத் திருத்தந்தை ஏற்றுள்ளார்


ஜூன்,04,2013. இஸ்பானிய உள்நாட்டுக் கலவரத்தின்போது கொல்லப்பட்ட 90க்கும் மேற்பட்ட மறைசாட்சிகள் மற்றும் நான்கு சபைகளைத் தொடங்கியவர்களின் வீரத்துவமான வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணங்களை அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்பெயினில் 1936ம் ஆண்டில் விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்ட புனித பெனடிக்ட் சபையின் Mauro மற்றும் அவரோடு சேர்ந்த 17 பேர்; கார்மேல் சபையின் Giovanni di Gesù மற்றும் அவரோடு சேர்ந்த 3 பேர்; மறைமாவட்ட அருள்பணியாளர் Paolo Segalá Solé; Aurelia மற்றும் அவரோடு சேர்ந்த அருள்சகோதரிகள் 3 பேர்; 1936ம் ஆண்டுக்கும் 1939ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்ட மாரிஸ்ட் சகோதரர்கள் சபையின் Crisanto, Aquilino, Cipriano Giuseppe மற்றும் அவர்களோடு சேர்ந்த 63 பேர், இன்னும் 2 பொதுநிலையினர் ஆகிய மறைசாட்சிகள் குறித்த விபரங்களையும்,
போர்த்துக்கல் நாட்டின் "Liga dos Servos de Jesus" என்ற கழகத்தை நிறுவிய ஆயர் Giovanni De Oliveira Matos Ferreira; கல்வி நிறுவனத்தை ஆரம்பித்த இத்தாலிய அருள்பணியாளர் Nicola Mazza, மீட்பர் சகோதரிகள் சபையை நிறுவிய இத்தாலியரான அருள்சகோதரி Maria Celeste; இஸ்பெயினில் புனித வளன் கார்மேல் சகோதரிகள் சபையை தோற்றுவித்த Teresa Toda y Juncosa ஆகியோரின் வீரத்துவமான வாழ்வு குறித்த விபரங்களையும் ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.