2013-06-03 17:51:07

கழுத்துப் புற்றுநோய்க்கும் புகையிலையே காரணம்


ஜூன்,03,2013. புகையிலையால், வாய்ப் புற்றுநோய் மட்டுமே ஏற்படுவதாக இதுவரை வெளிவந்துள்ள தகவல் தெளிவானதல்ல என்றும், தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும் புகையிலை காரணமாக இருப்பதாக குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
குஜராத்தில், ஆண்டுதோறும் புதிதாக 45 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதில், 30 முதல் 35 விழுக்காட்டினர் கழுத்து மற்றும் தலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
புகையிலை உபயோகத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தாங்கள் செய்து வருவதாகவும் அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.