2013-06-01 16:56:26

செவ்வாய்க் கிரகத்தில் அதிகக் கதிர்வீச்சு ஆபத்து: நாசா


ஜூன்,01,2013. எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்றும் நாசா கூறுகிறது.
புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடிய அளவில் இந்தக் கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா நிறுவனம் எச்சரித்துள்ளது.
கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தைக்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தரைக்குச் செல்ல 8 மாதங்களுக்கும் மேல் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.