2013-05-31 16:17:45

மகாகவி இரவீந்திரநாத தாகூர் அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் பாராட்டு


மே,31,2013. அகில உலகுக்கும் சகிப்புத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் வழங்கியுள்ள கீதாஞ்சலி என்ற அமர இலக்கியத்தைப் படைத்த வங்கக்கவி இரவீந்திரநாத தாகூர் அவர்களைப் பாராட்டியுள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.
கலாச்சாரங்களுக்கிடையே புரிந்துகொள்ளுதலையும் நன்மதிப்பையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் இவ்வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டப்பட்டுள்ளார் மகாகவி இரவீந்திரநாத தாகூர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஐ.நா.பொது அவையின் உதவித் தலைவர் Abulkalam Abdul Momen, மகாகவி தாகூர் அவர்களின் கவிதைகள், ஒருவர் தனது வாழ்வில் தூய்மையடையவும் மீட்படையவும் உதவும் செபங்களாக உள்ளன என்று கூறினார்.
கீதாஞ்சலி என்ற அமர இலக்கியத்துக்காக 1913ம் ஆண்டில் நொபெல் இலக்கிய விருதைப் பெற்றார் மகாகவி தாகூர். இந்த இலக்கியம், உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஆதாராம் : UN







All the contents on this site are copyrighted ©.