2013-05-30 16:21:00

புனிதத் துணியை மையப்படுத்தி, மெக்சிகோ நகரில் அகில உலகக் கருத்தரங்கு


மே,30,2013. இயேசுவின் புனித உடலைப் போர்த்தியிருந்ததாகக் கருதப்படும் புனிதத் துணியை மையப்படுத்தி, மெக்சிகோ நகரில் அண்மையில் ஓர் அகில உலகக் கருத்தரங்கு நடைபெற்றது.
புனிதத் துணியின் ஆய்வுக்கென மெக்சிகோ நகரில் அமைந்துள்ள ஒரு மையத்தின் 30ம் ஆண்டு நிறைவாக, 'புனிதத் துணியும், நம்பிக்கை ஆண்டும்' என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்தத் துணி, ஓவியர் Leonardo Da Vinci அவர்களால் வரையப்பட்டது என்ற கருத்தை முறியடிக்கும் வண்ணம், இத்துணி முதல் நூற்றாண்டைச் சாந்தது என்பதும், Da Vinci பிறப்பதற்கு 96 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தத் துணி ஐரோப்பாவின் சில இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது என்பதும் கருத்தரங்கில் வெளியான ஒரு சில கருத்துக்கள்.
இப்புனிதத் துணியின் பிரதிபோல உருவாக்கப்பட்டுள்ள ஒரு கண்காட்சிப் பொருள், இக்கருத்தரங்கையொட்டி, Guadalupe பசிலிக்காவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

ஆதாரம் – CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.