2013-05-27 17:32:12

உஸ்பெகிஸ்தானில் கிறிஸ்தவ இலக்கியங்களை வைத்திருந்தவருக்கு 18மாத தண்டனை


மே,27,2013. உஸ்பெகிஸ்தானில் மத தொடர்புடைய இலக்கியங்களை வைத்திருந்தார் மற்றும் விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் 18மாத தண்டனை வழங்கப்பட்டுள்ளார் கிறிஸ்தவ பெண் ஒருவர்.
அனுமதியின்றி மத இலக்கியங்களை வைத்திருந்ததால் அரசுக்கென சிறு சிறு சேவைகளை ஆற்றி அதிலிருந்து கிட்டும் ஊதியத்தின் ஒரு பகுதியை அபராதமாக வழங்குவதோடு, அடுத்த சில மாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பயணம் செய்யமுடியும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் கைதுகளின் தொட்ர்ச்சியாக இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் மத நடவடிக்கையாளர்கள்.
இதற்கிடையே, அந்நாட்டின் தலைநகரில் ஒரு தனியார் வீட்டில் விவிலிய வாசிப்பில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினருக்கு பெரிய அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.