2013-05-25 16:59:17

இசுலாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துவருவது குறித்து எச்சரிக்கை, டான்சானியா ஆயர்


மே,25,2013. டான்சானியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துவருவது குறித்து எச்சரித்துள்ளவேளை, நாட்டில் இடம்பெறும் வன்முறை மற்றும் மிரட்டல்களுக்கு எதிராய்க் காவல்துறையும் அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் Iringa ஆயர் Tarcisius Ngalalekumtwa.
டான்சானியாவில் அண்மையில் இடம்பெறுள்ள வன்முறைகளைக் கவனமின்றி ஒதுக்கிவிட முடியாது என்று CNS செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் டான்சானிய ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Tarcisius.
டான்சானியாவில் கிறிஸ்தவ-முஸ்லீம் உறவு எப்போதும் பிரச்சனையின்றியே இருந்து வருகிறது, ஆயினும் அண்மையில் இடம்பெற்ற வன்முறைக்கு வெளிநாட்டுச் சக்திகளே காரணம் என்றும் ஆயர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்ரிக்கா முழுவதையும் இசுலாமாக அறிவிக்கும் 1989ம் ஆண்டின் அபுஜா அறிவிப்பை அமல்படுத்துவதன் நோக்கத்தில் இந்த வன்முறை நடத்தப்பட்டது எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.