2013-05-25 17:01:58

Fukushima அணுமின்நிலையத்தைச் செயலிழக்கச் செய்யும் பணிகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும், ஐ.நா.


மே,25,2013. ஈராண்டுகளுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பழுதான ஜப்பானின் Fukushima Daiichi அணுமின்நிலையத்தைச் சீரமைக்கும் பணியில் முன்னேற்றம் காணப்பட்டாலும், அதனைச் செயலிழக்கச் செய்வதற்கு முன்னர் சரிசெய்யப்பட வேண்டிய விவகாரங்கள் இன்னும் உள்ளன என்று IAEA என்ற ஐ.நா.வின் அணுசக்தி நிறுவனம் கூறியது.
Fukushima பகுதியில் தொடர்ந்து நிரம்பிவரும் மாசடைந்த தண்ணீர் அப்பகுதியின் பாதுகாப்பான தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்றும், இந்நிலை சரிசெய்யப்பட வேண்டுமென்றும் IAEA நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானில் 9.0 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தனர். இச்சுனாமியில் Fukushima Daiichi அணுமின்நிலையமும் படுசேதமடைந்தது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.