2013-05-24 16:33:12

திருத்தந்தை பிரான்சிஸ் : சீனாவுக்காகச் செபம்


மே,24,2013. புதுமைகள் நிகழ்கின்றன. ஆயினும் செபம் தேவைப்படுகின்றது. அச்செபம், துணிச்சல், போராட்டம் மற்றும் இடைவிடாதச் செபமாக இருக்க வேண்டும். அச்செபம் வெறும் சடங்காக இருக்கக்கூடாது என்று இவ்வெள்ளிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் ஒன்பது மொழிகளில் இவ்வாறு எழுதியுள்ள திருத்தந்தை, மே 24ம் தேதியான இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட சகாய அன்னை விழாவை முன்னிட்டு மற்றுமொரு செய்தியையும் தனது டுவிட்டரில் எழுதியுள்ளார்.
Sheshan அன்னைமரியின் பாதுகாவலில் நம்பிக்கை வைத்துள்ள சீனாவிலுள்ள கத்தோலிக்கருடன் தானும் இணைந்து, கிறிஸ்தவர்களுக்கு உதவும் மரியின் விழா நாளில் அம்மக்களுக்காகச் செபிப்பதாக டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இவ்வெள்ளி காலை திருப்பலியின் மன்றாட்டிலும் சீன மக்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சீன மக்களுக்காகச் செபிக்கும் செபநாளை 2007ம் ஆண்டில் ஏற்படுத்தினார் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.