2013-05-24 16:41:29

உலகப் பொருளாதாரம் முன்னேறினாலும் சந்திக்கப்பட வேண்டிய சவால்கள் இன்னும் உள்ளன, ஐ.நா. அறிக்கை


மே,24,2013. உலகப் பொருளாதாரம் முன்னேறினாலும் சந்திக்கப்பட வேண்டிய சவால்கள் இன்னும் உள்ளன என்று ஐ.நா.வின் உலகப் பொருளாதார நிலை குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது.
உலகப் பொருளாதார நிலை குறித்து இவ்வியாழனன்று நிருபர் கூட்டத்தில் விளக்கிய உலகப் பொருளாதாரத்திற்கான WESP நிறுவனத்தின் உதவிப் பொதுச் செயலர் Shamshad Akhtar, பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் கடந்த ஆண்டின் இறுதியில் எடுத்த புதிய கொள்கைகள் ஆபத்துக்களைக் குறைத்துள்ளன என்று கூறினார்.
இந்தப் புதிய கொள்கைகள், வணிகம் மற்றும் முதலீடுகளுக்கு உதவியுள்ளன, ஆயினும் பொருளாதார வளர்ச்சியில் மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது என்றும் Akhtar விளக்கினார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.