2013-05-21 15:30:05

புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் நல்ல பலனைத் தரும், நைஜீரிய ஆயர்கள் நம்பிக்கை


மே,21,2013. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டிருப்பது நாட்டில் சுமுகமான சூழலை உருவாக்க உதவும் என்ற தங்கள் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள்.
நைஜீரியாவில் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு அரசு எடுத்துள்ள இம்முயற்சிகள் நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள ஆயர்கள், நைஜீரிய அரசுத்தலைவர் Goodluck Jonathan, அரசியல் அமைப்பு சார்ந்த தனது கடமைகளைச் செய்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
அரசின் நடவடிக்கைகள், நாட்டில் நிலைத்த அமைதியைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையோடு மக்கள் செபிக்கின்றனர் என்று நைஜீரியாவின் Borno மாநிலத் தலைநகரான Maiduguri ஆயர் Oliver Dashe Doeme, CNS செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
நைஜீரியாவில், Boko Haram இசுலாமியத் தீவிரவாதக் குழு 2009ம் ஆண்டில் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து குறைந்தது 2,000 பேர் இறந்துள்ளனர்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.