2013-05-16 16:52:36

கிறிஸ்தவ இஸ்லாம் மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்த Asghar Ali Engineer மறைவு


மே,16,2013. இந்தியாவில் கிறிஸ்தவ இஸ்லாம் மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டு, உழைத்து வந்த Asghar Ali Engineer அவர்களின் மறைவு நாட்டுக்கும், மத நல்லுறவு முயற்சிகளுக்கும் பெரும் இழப்பு என்று அருள் பணியாளர் Pushpa Anbu கூறினார்.
இஸ்லாமிய மதத்தின் தலைசிறந்த அறிஞர் Engineer, மேமாதம் 14ம் தேதி இச்செவ்வாயன்று தன் 74 வயதில் காலமானதை அடுத்து, இஸ்லாமிய கல்விக் கழகத்தின் செயலராகப் பணியாற்றும் அருள் பணியாளர் Anbu, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
1939ம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த Engineer அவர்கள், இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் அரேபிய மொழியில் சிறந்த அறிஞராக விளங்கியவர் என்றும், கிறிஸ்தவ இஸ்லாமிய உறவை வளர்க்க பாடுபட்டவர் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்க இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக, 1987ம் ஆண்டு அகில உலக விருது ஒன்றை அமெரிக்க ஐக்கிய நாடும், 1997ம் ஆண்டு மத நல்லிணக்க விருதை இந்திய அரசும் Engineer அவர்களுக்கு வழங்கின.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.