2013-05-16 16:47:32

Constantinople Ecumenical முதுபெரும் தலைவர் மிலான் நகர் வருகைக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி


மே,16,2013. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்துவர்களுக்கு அளிக்கப்பட்ட மதச் சுதந்திரம், நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்வதற்கும், ஐரோப்பிய கலாச்சாரம் உருவாவதற்கும் வழி வகுத்தது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கி.பி. 313ம் ஆண்டு பேரரசர் Constantine வெளியிட்ட ஓர் அதிகாரப் பூர்வமான அறிக்கை கிறிஸ்தவ மதத்திற்கு சுதந்திரம் அளித்தது. இந்த அறிக்கை 'மிலான் அறிக்கை' என்று அழைக்கப்படுகிறது.
இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் 17வது நூற்றாண்டைக் கொண்டாடும் நோக்கத்துடன், Constantinople Ecumenical முதுபெரும் தலைவர், முதலாம் Bartholomew அவர்கள் மிலான் நகரில் கர்தினால் Angelo Scola அவர்களைச் சந்திக்க மிலான் நகர் வந்துள்ளார்.
இந்தச் சந்திப்பையும், இந்த நூற்றாண்டு விழாவையும் ஒட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், மதச் சுதந்திரம் பெற்ற கிறிஸ்தவம், உலகிற்கு ஆற்றியுள்ள நன்மைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேரரசர் Constantine காட்டிய வழியைப் பின்பற்றி வேறு பல அரசர்களும் மதச் சுதந்திரம் வழங்கியதால், உலகெங்கும் கிறிஸ்தவம் மதிப்பிற்குரிய ஒரு மதமாக வளர முடிந்தது என்பதையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
திருத்தந்தையின் பெயரால், இப்புதன் மாலை இச்செய்தியை மிலான் பேராயர் கர்தினால் Scola அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.