2013-05-15 17:38:02

கத்தோலிக்கத் திருஅவையிலும் ஆங்கிலிக்கன் சபையிலும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளில் தூய ஆவியாரின் வழிநடத்துதலைக் காண முடிந்தது - வியன்னா பேராயர்


மே,15,2013. கத்தோலிக்கத் திருஅவையிலும் ஆங்கிலிக்கன் சபையிலும் அண்மையக் காலங்களில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளில் தூய ஆவியாரின் வழிநடத்துதலைத் தெளிவாக காண முடிந்தது என்று வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn கூறினார்.
இலண்டனில் இச்செவ்வாயன்று ஆங்கிலிக்கன் சபையினர் நடத்திய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Schönborn, கத்தோலிக்கத் திருஅவையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டதிலும், Canterbury பேராயராக Justin Welby அவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டதிலும் தூய ஆவியாரின் செயல்பாட்டை எளிதில் காண முடிகிறது என்று கூறினார்.
கான்கிளேவ் அவையில் தான் பங்கேற்கச் செல்வதற்கு முன்னர் பொது நிலையினர் இருவரை தான் சந்தித்ததைக் குறித்துப் பேசிய கர்தினால் Schönborn, அவர்களே தன் மனதில் கர்தினால் Borgoglio அவர்களின் பெயரைப் பதித்தனர் என்பதையும் எடுத்துரைத்தார்.
இவ்விரு தலைவர்களின் தேர்தலிலும் உறுதுணையாக இருந்த தூய ஆவியார், இவ்விரு சபைகளையும் இன்னும் கிறிஸ்தவ ஒன்றிப்பில் ஆழப்படுத்துவார் என்ற தன் நம்பிக்கையையும் கர்தினால் Schönborn தன் உரையில் வெளியிட்டார்.

ஆதாரம் : The Telegraph








All the contents on this site are copyrighted ©.