2013-05-09 16:12:38

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் களையும் சட்டங்களுக்காக Tanzania பெண் அமைப்புக்கள் போராட்டம்


மே,09,2013. Tanzania நாட்டில் மேற்கொள்ளபட்டுள்ள சட்டச் சீர்த்திருந்தங்களில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் களையும் சட்டங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் பெண் அமைப்புக்கள் போராடி வருகின்றன.
Tanzaniaவில் சட்டச் சீர்த்திருத்தங்கள் குறித்த முயற்சிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. இம்மாத இறுதிக்குள் முடிவடைய வேண்டும் என்ற காலக் கெடுவுடன் துவக்கப்பட்டுள்ள இந்தச் சீர்திருத்த முயற்சிகள் குழுவின் தலைவராக முன்னாள் பிரதமர் Joseph Warioba நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்களின் பிறப்பு உறுப்புக்களை முடமாக்கும் செயல்பாடுகளை நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றுதல், மற்றும் பெண்களுக்கு பொது வாழ்வில் இணையான உரிமைகள் வழங்குதல் ஆகிய உரிமைகளைக் கோரி, பெண் அமைப்புக்கள் குரல் எழுப்பி வருகின்றன.
மாற்றங்களை உள்ளடக்கிய புதிய சட்ட வரைவுகள் இம்மாத இறுதிக்குப் பின்னர் மக்களின் பொது வாக்கெடுப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : MISNA








All the contents on this site are copyrighted ©.