2013-05-09 16:09:20

தேர்தல் மூலம் பாகிஸ்தானில் புதிய மாற்றங்கள் உருவாக வேண்டும் - ஆயர் Rufin Anthony


மே,09,2013. பாகிஸ்தானில் நிலவிவரும் சகிப்பற்றதன்மை, ஊழல்கள், வன்முறைகள், ஆகிய அனைத்து குறைபாடுகளும் நடைபெறவிருக்கும் தேர்தல் மூலம் நீங்கி, புதிய மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
மே மாதம் 11, வருகிற சனிக்கிழமையன்று பாகிஸ்தானில் நிகழவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் அந்நாட்டில் நிலவி வரும் வலுவற்ற பொருளாதார நிலை, மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத போக்குகள் ஆகியவற்றிற்கு ஒரு மாற்றாக அமையவேண்டும் என்று இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி ஆயர் Rufin Anthony கூறினார்.
பாகிஸ்தான் தற்போது தேடி வருவது அமைதியும், உலக நாடுகளிடையே நல்லுறவு, மதிப்பு ஆகிய நல்ல அம்சங்களே என்று கூறிய ஆயர் Anthony, இந்த நிலை உருவாக சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களுடன் இஸ்லாமியர்களும் பாடுபடுகின்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
பாகிஸ்தானில் உண்மையான மாற்றங்கள் உருவாக, கிறிஸ்தவத் தலைவர்கள் அரசியலில் இன்னும் அதிகமாய் பங்கேற்க வேண்டும் என்று ராவல்பிண்டியில் பணியாற்றும் அருள் பணியாளர் Anwar Patras கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.