2013-05-07 16:20:01

மலேசியாவில் தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஒப்புரவுக்கு அழைப்பு


மே,07,2013. மலேசியாவில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் Barisan கூட்டணி, 133 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளவேளை, அந்நாட்டின் அரசியல் ஆதாயங்களுக்காக மத விவகாரங்களை அரசு பயன்படுத்தாது என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் அருள்பணி லாரன்ஸ் ஆன்ட்ரூ.
சீர்திருத்தம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, நீதி, ஒளிவுமறைவின்மை போன்ற பாதையில் அரசு செயல்படத் தொடங்க வேண்டும், அப்போதுதான் நாட்டில் ஒற்றுமையையும் நம்பிக்கையையும் நிலைநிறுத்த முடியும் என்று அக்குரு Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதற்கிடையே, மலேசியாவின் இன மற்றும மதவாதப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, தேசிய ஒப்புரவின் புதிய பாதையில் அனைவரும் நடப்பதே நாட்டுக்கு நல்லது எனத் தெரிவித்துள்ளார் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள Najib Razak .

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.