2013-05-07 16:53:37

கற்றனைத் தூறும் மனிதத் தோல்...


முழு வளர்ச்சியடைந்த சராசரி அளவுள்ள மனிதரின் தோல் பரப்பளவு - 21 சதுர அடிகள். மொத்தத் தோலின் எடை – ஏறத்தாழ 4.08 கிலோகிராம். தோலில் படர்ந்துள்ள இரத்தக் குழாய்களின் நீளம் – 17.7 கிலோ மீட்டர்கள்.
குழந்தைப் பருவத்தில் 1 மி.மீ. தடினமனாக உள்ள தோல், முழுவளர்ச்சி அடைந்த உடலில் 2 மி.மீ. தடிமனாக மாறுகிறது. வயது கூடக் கூட, தோலின் தடிமன் மீண்டும் குறைகிறது.
சூரிய ஒளியின் உதவியால், நமது உடலில் வைட்டமின் D உருவாக உதவும் உறுப்பு நமது தோல்.
நமது கைவிரல் ரேகை ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தும் தனித்துவம் உள்ளது என்றாலும், உயிரணுவில், Naegeli Syndrome என்ற குறைபாட்டுடன் பிறப்பவர்களுக்கு விரல்களில் ரேகை வடிவங்கள் உருவாவதில்லை.
பார்வைத் திறன் இழந்தவர்களின் தொடுதல் உணர்வு பல மடங்கு கூர்மை பெறுவதால், அவர்களால் தொடுதல் மூலம் 'பார்க்க' முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
நமது தோலில் ஒவ்வொரு நிமிடமும் 50,000 உயிரணுக்கள் இறந்து, அவை நமது மேல் தோலிலிருந்து சிறு துகள்களாய் வீழ்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள தூசிகளில் பெருமளவு, உதிர்ந்த நமது தோல் துகள்களே!

ஆதாரம் - http://discovermagazine.com
http://wiki.answers.com








All the contents on this site are copyrighted ©.