2013-05-06 16:59:26

திருத்தந்தையுடன் சுவிஸ் கூட்டாட்சி அமைப்பின் தலைவர் சந்திப்பு


மே,06,2013. சுவிஸ் கூட்டாட்சி அமைப்பின் தலைவர் Ueli Maurer, இத்திங்களன்று காலை திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
திருத்தந்தைக்கு மெய்க்காப்பாளர்களாகச் செயல்படும் சுவிஸ் காவல்படையினர் ஒவ்வோர் ஆண்டும் பதவிப்பிரமாணம் எடுக்கும் மே 6ம் தேதியான இத்திங்களன்று திருத்தந்தையுடன் இடம்பெற்ற இச்சந்திப்பின் இறுதியில், திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடன் உறவுகளுக்கானதுறையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார் சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர்,.
சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் ஆற்றிவரும் சிறப்புப்பணிகள், திருப்பீடத்திற்கும் சுவிஸ் நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவு, சுவிஸ் தலத்திருஅவைக்கும் அரசுக்கும் இடையே உள்ள நல்லுறவுகள் ஆகியவை குறித்தும் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டன.
இருநாடுகளுக்கும் பொதுவான ஆர்வமுடய விடயங்களான மனித உரிமைகள், இளைஞர்களுக்கு பயிற்சியளித்து உருவாக்குதல், நீதி அமைதியை ஊக்குவிக்கும் நோக்கிலான சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் திருப்பீட அதிகாரிகளுடன் விவாதித்தார் சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் Ueli Maurer என திருப்பீட பத்திரிகைத்துறை வெளியிட்ட செய்தி கூறுகிறது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.