2013-05-04 15:47:11

புத்த மதத்தினருடன் உரையாடல் நடத்த Galle ஆயர் அழைப்பு


மே,04,2013. இலங்கையில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் மிகவும் கவலைதரும்வேளை, நாட்டில் சமூக மற்றும் சமய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உரையாடலும் ஆர்வமும் அவசியம் என்று Galle ஆயர் Raymond Wickramasinghe கூறியுள்ளார்.
வேசாக் புத்தமத விழாவையொட்டி புத்தமதத்தினருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய செய்திக்கு நன்றி தெரிவித்த ஆயர் Wickramasinghe, இலங்கையில் இடம்பெற்றுவரும் அனைத்து விதமான வன்முறைகளுக்குத் தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
புத்தமதத் தீவிரவாதிகளால் இடம்பெற்றுள்ள வன்முறைகள் குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த ஆயர் Wickramasinghe, மக்கள் அனைவரும் அமைதியிலும் நல்லிணக்கத்திலும் வாழவும், சமய, இனப் பாகுபாடின்றி ஒவ்வொருவரின் மனித மாண்பு மதிக்கப்படவும் இலங்கையின் சமயத் தலைவர்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.