2013-05-03 16:32:04

நான்கு இறையடியார்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளுக்குத் திருத்தந்தை ஒப்புதல்


மே,03,2013. இரண்டு இத்தாலியர், ஓர் இஸ்பானியர், ஒரு போலந்து நாட்டவர் என நான்கு இறையடியார்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளை இவ்வியாழனன்று அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் Cagliariல் 1812ம் ஆண்டு பிறந்த சிசிலியின் அரசி Maria Cristina, இத்தாலியின் Bosaroவில் 1924ம் ஆண்டு பிறந்த Maria Bolognesi, இஸ்பெயினின் Palma de Mallorcaவில் 1833ம் ஆண்டு பிறந்த அருள்பணி Gioacchino Rosselló i Ferrà, போலந்தின் Wieluńல் 1885ம் ஆண்டு பிறந்த Maria Teresa ஆகிய நான்கு இறையடியார்களின் பரிந்துரைகளால் புதுமைகள் நடைபெற்றுள்ளன.
திருப்பீட புனிதர்நிலைக்கு உயர்த்தும் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ தலைமையிலான குழு இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து இந்நால்வர் குறித்த விபரங்களைச் சமர்ப்பித்தது.
இறையடியார் அருள்பணி Gioacchino, இயேசு மரி திருஇதயங்கள் சபையை நிறுவியவர். இறையடியார் மரிய தெரேசா, குழந்தை இயேசுவின் கார்மேல் சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர்.
ஓர் இறையடியார், அருளாளர் நிலைக்கும், புனிதர் நிலைக்கும் உயர்த்தப்படுவதற்கு அவர் பரிந்துரையால் ஒவ்வொரு நிலைக்கும் குறைந்தது ஒரு புதுமையாவது நடந்திருக்க வேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.