2013-05-01 15:57:43

பாரக் ஒபாமா வெளியிட்டுள்ள 'பட்ஜெட்'டைக் குறித்து, அமெரிக்க ஆயர்களின் கருத்துக்கள்


மே,01,2013. பசியுற்றோர், வேலையற்றோர், வீடற்றோர், வறியோர் எவ்வகையில் பயன் பெறுகின்றனர் என்பதன் அடிப்படையில் நாட்டின் 'பட்ஜெட்' அதாவது நாட்டின் வரவு செலவு திட்டத்தின் வெற்றியும் தோல்வியும் அளக்கப்படும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
3.77 ட்ரில்லியன் டாலர்கள் அதாவது 37700 கோடி டாலர்கள் மதிப்புள்ள 'பட்ஜெட்'டை 2014ம் ஆண்டுக்கென அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த பட்ஜெட்'டைக் குறித்து, அமெரிக்க ஆயர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டபோது, இவ்வாறு கூறினர்.
எவ்வகையிலும் தங்கள் குரல்களை எழுப்ப முடியாமல், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்களின் தேவைகளை அரசு உணரும்போதே, இந்த 'பட்ஜெட்' மனசாட்சியுடன் திட்டமிடப்பட்டுள்ளது என்பதை உணரலாம் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி, மனித முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Stephen Blaire, CNA செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
பொருளாதாரச் சரிவிலிருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவிக்கும் உலகில் அனைவரும் மேற்கொள்ளக்கூடிய தியாகங்களின் அடிப்படையில்தான் நீதியான சமுதாயம் உருவாக முடியும் என்பதே அமெரிக்க ஆயர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.