2013-04-29 17:02:52

976 குழந்தை திருமணங்கள் நிறுத்தம். இன்னும் விழிப்புணர்வு தேவை


ஏப்.29,2013. தமிழகத்தில், கடந்த, ஐந்து ஆண்டுகளில், 976 குழந்தை திருமணங்கள், சமூகநலத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமப்புறங்களில், குழந்தை திருமணங்கள் நடந்து வருகின்றன எனக்கூறும் சமூகநலத் துறை அதிகாரிகள், கடந்த 2008 முதல் 2013 பிப்ரவரி வரை, 976 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்றனர்.
குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கு, தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றபோதிலும், பொதுமக்கள் முழுமையான விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே, குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்கமுடியும்' எனவும் தெரிவித்தனர் சமூகநலத் துறை அதிகாரிகள்.
சமூகநலத் துறையின் கீழ் செயல்படும், மாவட்ட நல அலுவலர்கள், அந்தந்த மாவட்டங்களில், குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகளாக செயல்படுவதுடன், ஊராட்சித் தலைவரின் தலைமையில், ஊராட்சி அளவிலான கண்காணிப்பு குழுவும், தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

ஆதாரம் : Dinamalar








All the contents on this site are copyrighted ©.