2013-04-23 15:30:03

கத்தாரில் 2022ம் ஆண்டு உலகக் கோப்பை விளையாட்டுக்கானத் தயாரிப்பில் இலட்சக்கணக்கான குடியேற்றதாரர்


ஏப்.23,2013. கத்தார் நாட்டில் 2022ம் ஆண்டில் நடைபெறவிருக்கின்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு நாட்டின் உள்கட்டமைப்புகளுக்கும் விளையாட்டு அரங்கங்களை அமைப்பதற்கும் 12 இலட்சம் குடியேற்றதாரர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டு வருவதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
அனைத்துலக தொழிற்சங்க கூட்டமைப்பு(ITUC), உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுக் கழகத் (FIFA) தலைவர் Seep Blatterக்கு அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில், பணியாள்களுக்கு உண்மையான பாதுகாப்பு வழங்குவதற்கு கத்தார் அரசு தவறியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான கத்தாரின் பொருளாதார வளர்ச்சி 19 விழுக்காடாகும்.
கத்தாரில் வாழும் 19 இலட்சம் மக்களில் 3 இலட்சம் பேர் மட்டுமே கத்தார் குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.