2013-04-18 16:43:35

பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சிறுவனின் உலக அமைதிச் செய்தி


ஏப்.18,2013. பாஸ்டன் மாரத்தான் பந்தயத்தின் இறுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட எட்டுவயது சிறுவன் மார்டின் ரிச்சர்ட், உலக அமைதியை வலியுறுத்தும் வண்ணம் வரைந்திருந்த ஒரு படமும், வாசகமும் தற்போது இணையதளத்தில் வலம் வருகின்றது.
Lucia Brawley என்பவர் முகநூலில் (facebook) பதிவு செய்துள்ள இந்தப் படத்தைக் கண்டு பலரும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், குழந்தைகளிடமிருந்து அமைதிப் பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.
சென்ற ஆண்டு தன் புது நன்மையைப் பெற்ற மார்ட்டின், பள்ளியில் வரைந்திருந்த ஒரு படத்தில், "மக்களை இனி ஒருபோதும் காயப்படுத்தவேண்டாம், அமைதி" என்ற வார்த்தைகளை வரைந்திருந்தான்.
மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட Bill Richard அவர்கள் பந்தயத்தை முடிப்பதைக் காண அங்கிருந்த அவரது மனைவி, மகள், மற்றும் மகன் மார்டின் ஆகியோரில், மார்டின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டான். அவனது தாயும், சகோதரியும் இன்னும் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் உள்ளனர்.

ஆதாரம் : Washington Post








All the contents on this site are copyrighted ©.