2013-04-18 16:36:01

"நீதி, குடியரசு, சட்டங்கள்" என்ற தலைப்பில் ஆர்ஜன்டினா ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கை


ஏப்.18,2013. ஆர்ஜன்டினா அரசு நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்கும் முயற்சியில் இன்னும் பொறுமையாகச் செயல்பட்டு, பரந்துபட்ட ஆலோசனைகளைக் கேட்டு செயல்படவேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆர்ஜன்டினாவில் பணிபுரியும் 100க்கும் அதிகமான ஆயர்கள் இவ்வாரம் சனிக்கிழமை முடிய Buenos Aires நகரில் மேற்கொண்டுள்ள ஆண்டு கூட்டத்தையொட்டி, "நீதி, குடியரசு, சட்டங்கள்" என்ற தலைப்பில் ஆயர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் அரசுக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நீதித் துறையில் மாற்றங்களைக் கொணர அரசு கொணர்ந்துள்ள சட்ட வரைவுகள் மீது நாடு தழுவிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குடியரசை பெரிதும் வலுவிழக்கச் செய்யும் என்றும் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.