2013-04-18 16:42:59

அமெரிக்க கறுப்பின மக்களின் முதல் கத்தோலிக்க அருள் பணியாளர் Augustus Tolton நினைவைக் கொண்டாடும் திருப்பயணம்


ஏப்.18,2013. அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்களின் முதல் கத்தோலிக்க அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்தந்தை Augustus Tolton அவர்களின் நினைவைக் கொண்டாடும் ஒரு திருப்பயணத்தை வருகிற மே மாதம் சிகாகோ உயர்மறைமாவட்டம் ஏற்பாடு செய்து வருகிறது.
அமெரிக்க வரலாற்றில் அழிக்கமுடியாத கறையாகப் பதிந்துள்ள அடிமைகள் வரலாற்றுக்கு ஒரு கழுவாயாக இந்தத் திருப்பயணம் அமையும் என்று கறுப்பின கத்தோலிக்கர்களின் அலுவலக இயக்குனர், அருள்தந்தை Andrew Lyke, CNA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அமெரிக்காவின் Missouri பகுதியில் அடிமையாக உழைத்த கத்தோலிக்கப் பெண் Martha Jane என்பவருக்கு 1854ம் ஆண்டு பிறந்த Augustus, உரோம் நகரில் தன் குருத்துவ பயிற்சிகளைப் பெற்று, 1886ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
சிகாகோ நகரில் கறுப்பின மக்களுக்கென உருவாக்கப்பட்ட புனித மோனிகா பங்குதளத்தில் பணிபுரிந்த அருள்தந்தை Augustus, தன் 43வது வயதில் இறையடி சேர்ந்தார்.
இவரது எடுத்துக்காட்டான வாழ்வின் அடிப்படையில், 2010ம் ஆண்டு இவரைப் புனிதராக்கும் முயற்சிகளை சிகாகோ உயர் மறைமாவட்டம் மேற்கொண்டது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.