2013-04-18 16:42:17

Boko Haram குழுவுக்கு நைஜீரிய அரசு வழங்க விழையும் பொது மன்னிப்பு குறித்து அந்நாட்டு ஆயர்கள் எச்சரிக்கை


ஏப்.18,2013. Boko Haram என்ற அடிப்படைவாத குழுவுக்கு நைஜீரிய அரசு வழங்க விழையும் பொது மன்னிப்பு குறித்து அந்நாட்டு ஆயர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எண்ணெய் வளம் மிகுந்த தெற்கு நைஜீரியாவைக் கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் Boko Haram குழுவினருடன் அரசு தீவிரமான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆயுதங்களை முழுமையாக ஒப்படைத்தல், தெற்கு நைஜீரியா பகுதியிலிருந்து விலகிச் செல்லுதல் ஆகிய உறுதி மொழிகளின் அடிப்படையிலேயே இக்குழுவினருக்கு பொது மன்னிப்பு வழங்கும் முயற்சிகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று அந்நாட்டு பேராயர் Felix Alaba Job, ஆயர்களான Stephen Dami, Felix Femi Ajakaye ஆகியோர் CNS செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
2010ம் ஆண்டிலிருந்து Boko Haram குழுவினரின் தாக்குதல்களுக்கு கிறிஸ்தவர்களே பெருமளவில் இலக்காக அமைந்தனர் என்று கூறும் CNS செய்திக்குறிப்பு, இதுவரை இந்த வன்முறைகளில் 1400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.