2013-04-16 16:11:10

மனித வாழ்வின் மாண்பை ஊக்குவிக்கும் வத்திக்கான் கருத்தரங்கு


ஏப்.16,2013. மனித வாழ்வின் மாண்பு குறித்த திருஅவையின் போதனைகள் மற்றும் இவை புதிய நற்செய்திப்பணிக்கு எவ்வாறு பொருத்தமாக இருக்கின்றன என்பது குறித்து உரோமில் நடைபெறவிருக்கும் 2 நாள் நிகழ்வுகள், நம்பிக்கை ஆண்டின் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜூன் 15,16 தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பன்னாட்டு நிகழ்வுகள், வாழ்வுக் கலாச்சாரம் குறித்த திருஅவையின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் என்று, புதிய நற்செய்திப்பணியை ஊக்குவிப்பதற்கான திருப்பீட அவையின் அலுவலகர் அருள்திரு Geno Sylva கூறினார்.
“வாழ்வின் நற்செய்தியும் புதிய நற்செய்திப்பணியும்” என்ற தலைப்பில் முதல்நாள் காலை அமர்வுகள் நடைபெறும் எனவும், 1995ம் ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட Evangelium Vitae என்ற திருமடலில் அடங்கியுள்ள உண்மைகள் இந்நிகழ்வுகளில் வெளிப்படுத்தப்படும் எனவும் அருள்திரு Sylva கூறினார்
தற்போது சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டு வருகிற நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.