2013-04-16 16:12:19

ஜெர்மன் இயேசு சபை அருள்பணியாளரின் சமஸ்கிருத இலக்கணப் பிரதி வெளியிடப்பட்டுள்ளது


ஏப்.16,2013. ஜெர்மன் இயேசு சபை அருள்பணியாளர் Johann Ernst Hanxleden எழுதிய சமஸ்கிருத இலக்கணப் பிரதி ஒன்று பெல்ஜியத்தில் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Arnos Padre என அழைக்கப்பட்ட அருள்பணியாளர் Hanxleden ஒரு மெய்யியலாளர் மற்றும் சொற்களஞ்சிய மேதையாவார்.
300 ஆண்டுகளுக்கு முன்னர் சமஸ்கிருத மொழியில் இவர் எழுதிய இலக்கணம், சமஸ்கிருதத்திலுள்ள பழமையான மறைப்பணியாளர்களின் இலக்கணமாக நோக்கப்படுவதாக, திருச்சூர் Arnos Padre கழகத்தின் இயக்குனர் இயேசு சபை அருள்பணியாளர் Roy Thottathil தெரிவித்தார்.
'Grammatica Grandonica' என்ற 88 பக்க கையெழுத்துப் பிரதி 300 ஆண்டுகளுக்கு மேலாகக் காணாமற்போயிருந்தது என்றுரைத்த அருள்பணியாளர் Thottathil, இதனை Montecompatri கார்மேல் சபை துறவு இல்ல நூலகத்தில் கடந்த ஆண்டில் பெல்ஜிய நாட்டுப் பேராசிரியர் Toon Van Hal என்பவர் கண்டுபிடித்தார் என்று கூறினார்.
ஜெர்மனியின் Ostercappelnல் பிறந்த இயேசு சபை அருள்பணியாளர் Hanxleden, 1700ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்தியாவுக்கு வந்தார். இவர் 1712ம் ஆண்டில் வேலூரில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தைக் கட்டினார். தனது எஞ்சிய வாழ்நாளை அங்கேயே செலவிட்டார் என்று UCA செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.