2013-04-16 16:02:40

ஏப்ரல் 16, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 86வது பிறந்தநாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்தும் செபமும்


ஏப்.16,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 86வது பிறந்த நாளான இச்செவ்வாயன்று காலை தான் நிகழ்த்திய திருப்பலியை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காக அர்ப்பணித்துச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பிறந்த நாள், அவருக்காக இத்திருப்பலியை அர்ப்பணிப்போம், ஆண்டவர் அவரோடு இருந்து அவரைத் தேற்றி அவருக்கு மிகுந்த ஆறுதலை அளிப்பாராக என்று திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், காஸ்தெல் கந்தோல்ஃபோவில் தங்கியிருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குத் தொலைபேசியில் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நாள்களில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களோடு தங்கியிருக்கும் அவரது சகோதரர் பேரருள்திரு ஜார்ஜ் இராட்சிங்கர் அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
ஏப்ரல் 23, வருகிற செவ்வாய் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நாம விழா நாளாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.