2013-04-15 16:53:02

பாலஸ்தீனியப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பாதியாகியுள்ளது


ஏப்.15,2013. பாலஸ்தீனிய நிலப்பகுதிகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துள்ளதாக வத்திக்கானின் ஃபிதெஸ் செய்தி நிறுவனம் அறிவிக்கிறது.
பாலஸ்தீனியப் பகுதிகளில் 2000மாம் ஆண்டில் மோத்த மக்கள்தொகையில் 2 விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்கள் தற்போது ஒரு விழுக்காடாகக் குறைந்துள்ளதாக எடுத்துரைக்கும் செய்தி நிறுவனம், 1948ம் ஆண்டில் யெருசலேமில் 27,000மாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5000மாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கிறது.
பாதுகாப்பான வாழ்வைத்தேடி கிறிஸ்தவர்கள் மேற்கத்திய நாடுகளுக்குக் குடிபெயர்வதே இந்த எண்ணிக்கை குறைவிற்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறாமல் இருக்க, குழந்தைகளுக்கான கல்வி உரிமை, வேலைவாய்ப்பில் பாகுபாடின்மை, புதிய குடும்பங்களுக்கான வீட்டுவசதி போன்றவை உறுதிச்செய்யப்படவேண்டியது அவசியம் என்றார் Gaza பகுதியின் நீண்ட கால பங்குகுரு மானுவேல் முசல்லாம்.

ஆதாரம் FIDES







All the contents on this site are copyrighted ©.