2013-04-13 16:27:25

திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளில் நம்பிக்கை வைத்து நல்லதையும் தீயதையும் ஏற்க வேண்டும்


ஏப்.13,2013. கிறிஸ்தவர்கள் வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது குறுக்கு வழிகளைத் தேடாமல் எப்போதும் கடவுளில் நம்பிக்கை வைக்க வேண்டும், ஏனெனில் அவர் நமக்கு உதவி செய்வதில் தவறமாட்டார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஒரு மாதம் நிறைவடையும் ஏப்ரல் 13ம் தேதியான இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கலந்து கொண்ட வத்திக்கான் காவல்துறை மற்றும் தீயணைப்புப்படையினருக்கு ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
வாழ்வில் காரியங்கள் தவறாகச் சென்றுகொண்டிருக்கும்போது வாழ்வு எதனாலும் சரிசெய்யப்பட முடியாது, ஏனெனில் அப்படிச் செய்யும்போது வாழ்வின் ஆண்டவராகிய கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதாகும் என்றுரைத்த திருத்தந்தை, அதற்கு மாறாக, வாழ்வில் நடப்பதை ஏற்பதற்குக் கிறிஸ்தவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
முதல் கிறிஸ்தவச் சமூகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், பிரச்சனைகளைக் கண்டு பயப்படக் கூடாது, ஏனெனில் இயேசு நம்மோடு இருக்கிறார் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.