2013-04-11 15:50:43

புனித லாரன்ஸ் கால்பந்தாட்டக் குழுவினர் திருத்தந்தையுடன் சந்திப்பு


ஏப்.11,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராகப் பணியாற்றியபோது இரசித்துப் பின்பற்றிய புனித லாரன்ஸ் கால்பந்தாட்டக் குழுவினர் இப்புதன் பொது மறைப்போதகத்தின் இறுதியில் திருத்தந்தையைச் சந்தித்தனர்.
2008ம் ஆண்டு முதல் இந்தக் கால்பந்தாட்டக் குழுவின் 88235N என்ற இரசிகர் எண் பேராயர் கர்தினால் Bergoglio அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது என்றும், இக்குழுவின் இரசிகர்கள் "கழுகுகள்" என்று அழைக்கப்பட்டனர் என்றும் வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மறைப்போதகத்தின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், NATO பாதுகாப்புப் பயிற்சிக் கல்லூரியிலிருந்து வந்திருந்த மாணவர்களையும் சந்தித்து, உலக அமைதிக்காக அவர்கள் உழைப்பது அவசியம் என்பதைக் கூறினார்.
தோல் தொடர்பான நோய்களைக் குணமாக்க உரோம் நகரில் இயங்கிவரும் IDI என்ற ஒரு மருத்துவ நிறுவனம் தற்போது பொருளாதார நெருக்கடிகளையும், உழைப்பாளர்கள் வேலை நிறுத்தத்தையும் சந்தித்து வருவதை உணர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நிறுவனத்தின் உறுப்பினர்களைச் சந்தித்தபோது, அவர்களுக்காக தான் செபிப்பதாகக் கூறினார்.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.