2013-04-10 16:42:46

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஏப்ரல் 10, 2013. திருத்தந்தையின் பொது நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் விசுவாசிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கோடைகாலத்தில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கமேயென்றாலும், இவ்வளவு பெரிய அளவில் புதன் பொதுமறைபோதகங்களில் மக்கள் கலந்துகொள்வதற்கு, மக்கள் மீது திருத்தந்தை கொண்டுள்ள அக்கறையும் அவரின் அணுகுமுறையும் காரணங்கள் என்று சொல்லலாம்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், விசுவாச ஆண்டை மையமாக வைத்து கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை குறித்து தன் மறைபோதகத்தை வழங்கிவந்ததன் தொடர்ச்சியாக, கடந்தவாரம் புதனன்று “வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்" என்ற விசுவாச அறிக்கையின் வரிகளை வைத்து உரை வழங்கியதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, கிறிஸ்துவின் உயிர்ப்பு நமக்கும் நம் மீட்புக்கும் தரும் அர்த்தம் என்ன என்பது குறித்து நோக்குவோம் என தன் உரையைத் துவக்கினார். நமது ஆண்டவரின் இறப்பும் உயிர்ப்பும் நம் விசுவாசத்தின் அடிப்படையாக உள்ளன. பாவம் மற்றும் மரணத்தின் மீது வெற்றிகண்டதன் மூலம், புதிய வாழ்வுக்கான பாதையை நமக்குத் திறந்துள்ளார் கிறிஸ்து. திருமுழுக்கில் புதிதாக பிறந்த நாம், தூய ஆவியின் கொடையைப் பெற்று, இறைவன் தத்தெடுக்கும் குழந்தைகளாக மாறுகின்றோம். கடவுளே இப்போது நம் தந்தை. அவர் நம்மை தன் அன்புநிறை குழந்தைகளாக நடத்துகிறார். நாம் அவரை விட்டு விலகிச் சென்றாலும் அவர் நம்மை அன்புச் செய்கிறார், நம்மை அரவணைக்கிறார், மன்னிக்கிறார் மற்றும் நம்மைப் புரிந்துகொள்கிறார். கிறிஸ்தவம் என்பது இறைவனின் கட்டளைகளை பின்பற்றுவது மட்டுமன்று, அது ஒரு புதிய வாழ்வை வாழ்வதுபற்றியது. கிறிஸ்துவில் வாழ்ந்து, அவரைப்போல் சிந்தித்து, அவரைப்போல் நடந்து, அவர் அன்பால் உருமாற்றம் பெறுவதாகும். தினமும் இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல், தினசரி செபம், திருவருட்சாதனங்களில், குறிப்பாக ஒப்புரவு மற்றும் திருநற்கருணையில் பங்குபெறுதல், பிறரன்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவைகளால் இந்தப் புதிய வாழ்வு ஊட்டம்பெறவேண்டும். இறைவனே நம் வாழ்வின் மையமாக அமைய வேண்டும். மரணம் மற்றும் பாவத்தின் மீது இயேசு கண்ட வெற்றியிலிருந்து பிறந்த விடுதலை, மகிழ்வு மற்றும் நம்பிக்கைக் குறித்து நாம் வழங்கும் தினசரி சாட்சிய வாழ்வு மூலம் நம் சகோதர சகோதரிகள் வானை நோக்கி, அதாவது நம் மீட்பின் ஆண்டவரை நோக்கி தங்கள் பார்வையை எழுப்ப உதவுவதன் மூலம் நாம் இவ்வுலகிற்கு மிகப்பெரிய சேவையை ஆற்றுகின்றோம்.
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கியதிருத்தந்தை, ஈரானில் இடம்பெற்றநிலஅதிர்ச்சியால் உயிரிழந்தமற்றும் பாதிப்பட்டைந்துள்ளமக்களுக்கு தன் செபஉறுதிகளையும் வழங்கினார். தென் ஈரானில் இடம்பெற்றஇந்தநிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளனர், எண்ணற்றோர் காயமடைந்துள்ளனர் மற்றும் பெரும் பொருட்சேதமும் இடம்பெற்றுள்ளது என்று கூறியத் திருத்தந்தை, உயிரிழந்தவர்களுக்காகஇறைவனிடம் செபிப்பதாகவும், பாதிக்கப்பட்டோருடன் தான் அருகாமையில் இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர், தன் மறைபோதகத்தின் இறுதியில், அனைவருக்கும் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.