2013-04-09 16:08:30

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் அவர்களின் இறப்பையொட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் இரங்கல்


ஏப்.09,2013. மேலும், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் அவர்களின் இறப்பையொட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்களும், தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
1979ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டுவரை பிரிட்டனில் பிரதமராகப் பணியாற்றிய தாட்சர் அவர்களின் ஆன்மா நிறைசாந்தி அடைவதற்குத் தாங்கள் செபிப்பதாகக் கூறியுள்ள ஆயர்கள், அவரின் குடும்பத்தினருக்கும், அவருக்காக வருந்துவோருக்கும் தங்களது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர். பல்வேறு உலகத் தலைவர்களும் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்படுவது குறித்த அறிக்கையில் 1984ம் ஆண்டில் கையெழுத்திட்டவர் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர். இவர் பிரதமராக இருந்த காலத்தில்தான் Falkland தீவுகள் தொடர்பாக அர்ஜென்டினாவுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.