2013-04-09 16:13:56

பான் கி மூன் : வேதிய ஆயுதங்கள் ஐந்தாண்டுகளுக்குள் ஒழிக்கப்பட வேண்டும்


ஏப்.09,2013. நச்சு வாயு அடைக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சண்டைகள் உலகில் இனிமேல் ஒருபோதும் இடம்பெறக் கூடாது என்று கூறியுள்ள அதேவேளை, வேதிய ஆயுதங்கள் உலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு ஐ.நா.வின் 188 உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
அங்கோலா, வட கொரியா, எகிப்து, இஸ்ரேல், மியான்மார், சொமாலியா, தென் சூடான், சிரியா ஆகிய எட்டு நாடுகள், வேதிய ஆயுதங்கள் ஒழிப்பு ஒப்பந்தத்தில் இன்னும் இணையாமல் இருப்பதைக் குறிப்பிட்ட பான் கி மூன், அந்நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணையுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்திங்களன்று Hagueல் நடைபெற்ற, வேதிய ஆயுதங்கள் ஒழிப்பு ஒப்பந்தம் குறித்த மூன்றாம் ஆய்வுக் கூட்டத்தில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா.பொதுச்செயலர், இந்த ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவுக்கு எவ்வகையிலும் நியாயம் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
பேரழிவை ஏற்படுத்தும் இத்தகைய ஆயுதங்களை இந்த 21ம் நூற்றாண்டில் பயன்படுத்தியதாக சிரியா நாடு குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனவும் பான் கி மூன் கூறினார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.