2013-04-08 16:46:51

புதிய தேவநிந்தனைச் சட்டத்தை உருவாக்க பங்களாதேஷ் பிரதமர் மறுப்பு


ஏப்.08,2013. இஸ்லாமிய மதத்தையும் இறைவாக்கினர் முகமதுவையும் நிந்திப்பவர்களைத் தண்டிக்கும் புதிய தேவநிந்தனைச்சட்டம் ஒன்று பங்களாதேஷில் உருவாக்கப்படவேண்டும் என்ற சில இஸ்லாமியக் குழுக்களின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார் அந்நாட்டு பிரதமர்.
மதங்களை அவமதிக்க விரும்புபவர்களைத் தண்டிக்க நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் சட்டங்களே போதுமானது என்று கூறிய பிரதமர் ஷேக் ஹஷினா, அவரவர் மதங்களைப் பின்பற்ற ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது, அடுத்தவரின் மத உணர்வுகளைக் காயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.
மதங்கள் அவமதிக்கப்படுவதிலிருந்து காப்பாற்ற தற்போதிருக்கும் சட்டங்களே போதும், இதற்கென மரணதண்டனைச் சட்டம் இயற்றவேண்டியதில்லை எனவும் கூறினார் அவர்.
இஸ்லாமிய மதத்தையும் இறைவாக்கினர் முகமதுவையும் அவமதிப்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் நோக்கில் புதிய சட்டம் பங்களாதேஷில் கொணரப்படவேண்டும் என அரசை விண்ணப்பித்துள்ள சில குழுக்கள், அதற்கு மூன்று மாதக் காலக்கெடுவையும் அரசுக்கு வழங்கியுள்ளன.

ஆதாரம் - BBC








All the contents on this site are copyrighted ©.