2013-04-08 16:49:37

இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதியில் 31,000க்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்பு


ஏப்.08,2013. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் முதல் இலங்கை இராணுவத்தின் மிதி வெடியகற்றும் பிரிவினரால் ஏறத்தாழ 31,029 வெடிக்காத வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் இடம்பெற்ற பகுதிகளில் சுமார் 5,000 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு மிதிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து, மே 2009ம் ஆண்டு முதல் மார்ச் 2013ம் ஆண்டு காலப்பகுதி வரை ஏறத்தாழ 4,992 சாதாரண மதிவெடிகளும், ஏறத்தாழ 240 டாங்கி எதிர்ப்பு மதிவெடிகளும், மேலும் ஏறத்தாழ 39,029 வெடிக்காத வெடிபொருட்களும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அரசின் நிதியுதவியுடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் 74 சதுர கிலோ மீட்டருக்கு மேற்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டு முதல் போரினால் பாதிக்கப்பட்ட வெடிபொருட்கள் அகற்றப்பட்ட மொத்த வேலைத்திட்டத்தில் இது 15 விழுக்காடாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் - TamilWin








All the contents on this site are copyrighted ©.