2013-04-05 16:03:41

மூச்சுக்காற்று மூலம் இதய நோய்களைக் கண்டறிய முடியும்


ஏப்.05,2013. ஒரு மனிதரின் மூச்சுக்காற்றைப் பரிசோதனை செய்வதன் மூலம் அவருக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை அறிய முடியும் என சுவிட்சர்லாந்து நாட்டின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூச்சு வெளியேறும்போது, அதிலிருந்து வெளிவரும் வேதியப் பொருள்களை ஆய்வுசெய்த, ஜூரிச்சிலுள்ள Swiss Federal Institute of Technology என்ற நிறுவனத்தின் ஆய்வாளர்கள், மூச்சுக்காற்றிலிருக்கும் பொருள்கள் ஒவ்வொரு தனி நபருக்கும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளுக்குப் பதிலாக, மூச்சுக்காற்று பரிசோதனை செய்தாலே போதும் என்கிற நிலை உருவாகக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அவ்வகையில், விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுபவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளர்களா என்று பார்க்கவோ, அல்லது ஒரு நோயாளிக்கு எந்த அளவுக்கு மயக்கமருந்து கொடுக்கப்படவேண்டும் என்பதைக் கணிக்கவோ மூச்சுக்காற்று பரிசோதனை செய்தாலே போதும் எனும் நிலை ஏற்படக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

ஆதாரம்: பிபிசி







All the contents on this site are copyrighted ©.