2013-04-05 16:00:04

ஆங்லிக்கன் பேராயர் Tutu அவர்களுக்கு Templeton விருது


ஏப்.05,2013. உலகில் அமைதியை ஊக்குவிப்பதில் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை ஆற்றிவரும் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, புகழ்பெற்ற Templeton விருது தென்னாப்ரிக்க ஆங்லிக்கன் பேராயர் Desmond Tutu அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதரும் வரலாறு முழுவதும் தனித்துவமிக்கவர் என்பதை அங்கீகரிப்பதற்கு நம் ஒவ்வொருவரையும் பேராயர் Tutu அழைக்கிறார் என்று, பென்சில்வேனியாவை மையமாகக் கொண்ட Templeton நிறுவனத்தின் தலைவர் முனைவர் John M. Templeton Jr. கூறினார்.
தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராய்த் துணிச்சலுடன் போராடியவரான பேராயர் Tutu தான் போதிக்கும் கருத்தின்படியே வாழ்பவர் என்றும் அவர் கூறினார்.
ஆன்மீக வாழ்வில் குறிப்பிடத்தக்க பங்காற்றும் மனிதர்களை, அவர்கள் உயிரோடு இருக்கும்போதே கவுரவிக்கும் நோக்கத்தில் Sir John Templeton என்பவரால் 1972ம் ஆண்டில் Templeton விருது உருவாக்கப்பட்டது. இவ்விருது 17 இலட்சம் டாலரையும் உள்ளடக்கியது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.