2013-04-04 16:00:45

வடகொரிய மக்களுக்கு அருளையும் ஆசீரையும் நாம் வழங்குகிறோம் - Seoul பேராயர்


ஏப்.04,2013. போர் சூழலை உருவாக்கும் வகையில் வடகொரிய அரசு விடுத்து வரும் அறிக்கைகளுக்கு பதிலாக, அந்நாட்டு மக்களுக்கு அருளையும் ஆசீரையும் நாம் வழங்குகிறோம் என்று Seoul பேராயர் Andrew Yeom Soo-jung கூறினார்.
வடகொரிய நாட்டில் வாழும் சகோதர சகோதரிகள் அனைவரும் கிறிஸ்து உயிர்ப்பின் மகிழ்வை நிறைவாகப் பெறவேண்டும் என்று தன் உயிர்ப்புச் செய்தியில் வாழ்த்தியுள்ள பேராயர் Soo-jung, மரணம் ஒரு முடிவல்ல, அது புதியதோர் வாழ்வின் தொடக்கம் என்பதைக் கூறும் விழாவே உயிர்ப்பு விழா என்று கூறினார்.
Fides செய்தி நிறுவனத்தை அடைந்துள்ள பேராயரின் உயிர்ப்புச் செய்தியில், கிறிஸ்தவர்கள் அனைவரும் அமைதியைக் கொணரும் கருவிகளாக வேண்டும் என்ற சிறப்பான அழைப்பையும் பேராயர் Soo-jung நினைவுருத்தியுள்ளார்.
உயிர்ப்புப் பெருவிழாவன்று வழங்கிய 'Urbi et Orbi' சிறப்புச் செய்தியிலும் ஆசியாவைப் பற்றி குறிப்பிடுகையில், அங்கு வட, தென் கொரிய நாடுகளிடையே ஒப்புரவு வளரவேண்டுமென்ற ஆவலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் – Fides








All the contents on this site are copyrighted ©.