2013-04-03 16:12:08

அணு ஆயுதங்களை அழிக்க பிரிட்டனில் ஈஸ்டர் போராட்டங்கள்


ஏப்.03,2013. உயிர்ப்புத் திருவிழா நாட்களையொட்டி, அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்று பிரிட்டனில் வழக்கமாக நடைபெறும் ஈஸ்டர் போராட்டங்கள் Berkshire பகுதியின் Aldermaston நகரில் இத்திங்களன்று நடைபெற்றது.
Pax Christi என்ற கத்தோலிக்க அமைப்பினர் மேற்கொண்ட இப்போராட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர். அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் Trident எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலுக்குத் தேவையான ஆயுதங்கள் Aldermaston என்ற நகரில் தயாரிக்கப்படுவதால், 'Scarp Trident' என்ற விருதுவாக்குடன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
Trident திட்டங்களுக்காக பிரித்தானிய அரசு ஒதுக்கும் 100 பில்லியன் பவுண்டுகள், அதாவது, ஏறத்தாழ 8,700 கோடி ரூபாய் மக்களின் முன்னேற்றத்திற்குப் பயனுள்ள வகையில் செலவழிக்க அரசு தீர்மானம் எடுக்கவேண்டும் என்று இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Pax Christi அமைப்பின் உபதலைவர் Bruce Kent, ஏப்ரல் 1ம் தேதி முதல், மே 20ம் தேதி முடிய அணு ஆயுதங்களைத் தடை செய்யவேண்டும் என்ற தலைப்பில் பல்வேறு நகரங்களில் உரையாற்றுகிறார் என்று ICN கத்தோலிக்கச் செய்தி அறிவித்துள்ளது.

ஆதாரம் - ICN








All the contents on this site are copyrighted ©.