2013-04-01 15:01:02

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் 20 இலட்சம் சிறாருக்கு அடிப்படை வசதிகள் கிடையாது


7. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் 20 இலட்சம் சிறாருக்கு அடிப்படை வசதிகள் கிடையாது

ஏப்.01,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஏறக்குறைய 20 இலட்சம் சிறார் அடிப்படை சமூகநல உதவிகள் இன்றி உள்ளனர் மற்றும் அவர்கள், Séléka புரட்சிக்குழுவின் வன்முறைக்கு உட்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்று யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆப்ரிக்காவில் மிகுந்த ஆபத்தை எதிர்நோக்கும் சில பகுதிகளிலுள்ள சிறாரில், மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் சிறாரும் உள்ளடங்குவர் என்று யூனிசெப் நிறுவனத்தின் மாகாண இயக்குனர் Manuel Fontaine கூறினார்.
மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இச்சிறாருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட Fontaine, மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் குறைந்தது 41 இலட்சம் பேர் நேரிடையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் சிறார் என்றும் தெரிவித்தார்.
அந்நாட்டில் கடந்த டிசம்பரிலிருந்து 12 இலட்சம் பேர் அடிப்படை வசதிகளின்றி துன்புறுகின்றனர் என்றும் யூனிசெப் கூறியுள்ளது.

ஆதாரம் – ஐ.நா.செய்தி








All the contents on this site are copyrighted ©.