2013-03-25 16:32:26

புனித வாரத்திலாவது ஆயுதங்களைக் களைந்து, அமைதி வழியில் செல்லுமாறு கொலம்பியா நாட்டு பேராயரின் அழைப்பு


மார்ச்,25,2013. கொலம்பியா நாட்டில் ஆயுதங்கள் தாங்கி போராடிவரும் பல குழுக்களும், துவங்கியிருக்கும் புனித வாரத்திலாவது ஆயுதங்களைக் களைந்து, அமைதி வழியில் செல்லுமாறு அந்நாட்டு பேராயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
புனித வாரத்தில் மக்கள் மேற்கொள்ளும் பல ஆன்மீக முயற்சிகளுக்கு மரியாதை காட்டும் வகையில், வன்முறை குழுக்கள் ஆயுத பயன்பாட்டை நிறுத்தும் உறுதி மொழிகளை எடுக்கவேண்டும் என்று Cali உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Dario Monsalve Mejía அழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோல், போராட்டக் குழுக்களை வேட்டையாடி வரும் அரசும் தன் ஆயுத முயற்சிகளை விடுத்து, புனித வாரத்தை நல்ல முறையில் மக்கள் கடைபிடிக்க உதவ வேண்டும் என்று பேராயர் Mejía கொலம்பிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து மக்களும் இவ்வாரம் முழுவதும் வெள்ளை உடை அணிந்து தூய்மையையும், அமைதியையும் அனைவருக்கும் வெளிப்படையாக உணர்த்த வேண்டுமென்றும் பேராயரின் இந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதாரம்- Fides








All the contents on this site are copyrighted ©.