2013-03-25 16:21:32

நுரையீரல் நோயினால் வருந்துவோருக்கு திருத்தந்தையின் சிறப்பான செபங்கள்


மார்ச்,25,2013. நுரையீரல் நோய் பாதிப்பினால் உலகில் வருந்தும் அனைவரையும் துன்பங்களைத் தாங்கும் மரியன்னையின் பாதுகாவலில் அளிக்க விரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் குருத்து ஞாயிறுத் திருப்பலியை ஆற்றியபின், இறுதியில் நண்பகல் மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை, மார்ச் 24ம் தேதி கடைபிடிக்கப்படும் அகில உலக காசநோய் ஒழிப்பு நாளையொட்டி, அந்நோயுற்றோரை சிறப்பாக நினைவு கூர்ந்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளம் வயதிலேயே தன் நுரையீரலின் ஒரு சிறு பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் இழந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
மூவேளை செப உரையின் இறுதியில் அனைத்து இளையோரையும் பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனீரோ நகருக்கு அழைத்தத் திருத்தந்தை, உலகின் பல நாடுகளிலிருந்தும் அந்நகர் நோக்கிவரும் இளையோரின் பயணம் பாதுக்காப்புடன் அமையவேண்டும் என்றும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.ஆதாரம்- வத்திக்கான வானொலி







All the contents on this site are copyrighted ©.