2013-03-23 16:02:13

பூமி அளவுடைய 1,700 கோடிக் கிரகங்கள்


மார்ச்,23,2013. சூரியனைப் போன்ற அளவு கொண்ட விண்மீன்களை நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது.
அப்படியான விண்மீன்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க விண்ணியல் ஆராய்ச்சிக் குழுமத்திடம் இவ்வாய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பூமியை ஒத்த அளவில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையானவை உயிர்கள் வாழமுடியாத அளவுக்கு அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்பதை அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒரு கோளத்தில் உயிர்கள் வாழ்வதற்கு, திரவ வடிவில் நீர் வேண்டும். ஆனாலும் ஆயிரங்கோடிக் கணக்கில் பூமியை ஒத்த கிரகங்கள் இருக்கின்றபடியால், பூமியைப்போல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்ட கிரகம் ஒன்றை விண்ணியல் நிபுணர்கள் நிச்சயம் கண்டறிவார்கள் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.