2013-03-23 15:55:36

ஐ.நா. மனித உரிமைகள் அவையின் பரிந்துரைகளை அமல்படுத்த 2014ம் ஆண்டு வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது


மார்ச்,23,2013. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அந்நாட்டின் கிறிஸ்தவ மற்றும் புத்தமத்த்தினர் வரவேற்றுள்ளனர்.
மேலும், ஐ.நா,வின் மனித உரிமைகள் அவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த 2014ம் ஆண்டு வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐ.நா.வின் தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு உரிய முறையில் அமல்படுத்தியதா என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் அமர்வுகளின போது ஆராயப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு 26 அரசு சாரா நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.







All the contents on this site are copyrighted ©.